search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏபி டி வில்லியர்ஸ்"

    • ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்களை அறிவித்துள்ளார்.
    • பந்துவீச்சாளர்களை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும்.

    தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அவர்களது ஹோம் கிரவுண்ட்- எம் சின்னசாமி மைதானத்தை புரிந்து கொண்டு விளையாடும் அணியை உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதோடு ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்களை அறிவித்துள்ளார்.

    முன்னாள் ஆர்.சி.பி. வீரரான ஏபி டி வில்லியர்ஸ் அந்த அணி யுஸ்வேந்திர சாஹலை மீண்டும் அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஆர்.சி.பி. அணி ஹோம் கிரவுண்டில் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட உறுதியான மற்றும் அனுபம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இவர்கள் தவிர போட்டியை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு வீரர்களை வாங்குவதற்கு ஆர்.சி.பி. அணி மீதித் தொகையை செலவிட வேண்டும். இதைத் தொடர்ந்து ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ்- சாஹல், அஸ்வின், ககிசோ ரபாடா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த நான்கு வீரர்களுக்கு அதிக தொகையை செலவிடலாம் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், "நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் விராட் இருக்கிறார். வீரர்களை தக்கவைப்பதில் நாம் அதிக தொகையை செலவிடவில்லை. இன்னும் செலவிட அதிக தொகை இருப்பது நல்ல விஷயம்," என்று தெரிவித்தார். 

    • 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவித்தது.

    அதே நேரத்தில் விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எஞ்சிய 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய அவரது நண்பருமான டிவில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.

    விராட்கோலியும், அனுஷ்கா சர்மாவும் 2-வது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும், இதனால் தான் விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.


    கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிவில்லியர்ஸ் அதை மறுத்து இருந்தார். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்றும், விராட் கோலி குறித்து தவறான தகவலை பகிர்ந்து விட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் 2-வது குழந்தை குறித்த தகவல் தொடர்பாக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு டிவில்லியர்ஸ் மீண்டும் தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:-

    எனது நண்பர் விராட் கோலி இன்னும் அணியில் இடம்பெறாத நிலையில் உள்ளார். அவருக்கு தகுதியான தனியுரிமையை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.

    எனது முந்தைய தகவலில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இதற்காக விராட் கோலி குடும்பத்தினரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர்ந்து கொண்டது சரியல்ல.

    அவர் நலமுடன் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். எனவே தான் முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை. வேறு எதையும் நான் உறுப்படுத்தப் போவதில்லை. அவர் மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரை நன்றாக இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
    • விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர் என டி வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இரண்டு டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணத்தை மேற்கோள்காட்டி இந்திய அணியில் இருந்து விலகினார். இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலி தெரிவித்திருந்தார். பிசிசிஐ-யும் இது குறித்து முழு அறிக்கை வெளியிட்டு விராட் கோலிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே விராட் கோலியின் விலகலுக்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.

    விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர். அதனால்தான் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இதன் காரணமாகவே டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    எஞ்சிய 3 டெஸ்டிலும் கோலி விளையாடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

    விராட் கோலி- அனுஷ்கா சர்மா (கோப்புப்படம்)

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து தவறான தகவல் பகிர்ந்து விட்டேன் என்று டி வில்லியர்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    எனது யூடியூப் சேனலில் நான் கூறியது போல் குடும்பம் முதன்மையானது. அதே நேரத்தில் நான் ஒரு பயங்கரமான தவறு செய்து விட்டேன். விராட் கோலி குறித்து உண்மையில்லாத தவறான தகவலை பகிர்ந்து கொண்டேன்.

    அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அவரது உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும். இந்த இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவர் வலிமையாகவும், சிறப்பாகவும் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • 2018-ல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • 2021-ல் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் நீங்கா இடம் பெற்றவர்களில் ஏபி டி வில்லியர்ஸ் ஒருவர் என்றால் மிகையாகாது.

    2004-ல் தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என முத்திரை பதித்து 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் மூன்று வருடங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடினார். டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில விளையாடி 20,014 ரன்கள் குவித்துள்ளார்.

    2018-ம் ஆண்டு ஓய்வு பெறும்போது அவருக்கு வயது 34. கூடுதலாக இரண்டு மூன்று வருடங்கள் விளையாடியிருக்கலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்தனர். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டும் அதை விரும்பியது. ஆனால், சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.

    இந்த நிலையில் சமீபத்தில் விஸ்டன் கிரிக்கெட் உடன் உரையாடும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    என்னுடைய இளைய மகள் தற்செயலாக என்னுடைய கண் மீது காலால் உதைத்துவிட்டான். இதனால் வலது கண்ணில் என்னுடைய பார்வையை இழக்க ஆரம்பித்தேன். நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது மருத்துவர்கள் இந்த பார்வையுடன் எப்படி சர்வதேச கிரிக்கெட் விளையாடினீர்கள்? என்று கேட்டனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு வருடங்கள் சிறப்பாக செயல்பட என்னுடைய இடது கண் சிறப்பாக வேலை செய்தது. தன்னுடைய பார்வை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதிக்க அடிக்கடி ஸ்கோர் போர்டை பார்ப்பேன்.

    இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை பெற்ற வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெய்லை நெருங்குகிறார் டி வில்லியர்ஸ். #IPL2019
    ஐபிஎல் கிரிக்கெட்டில் ரசிகர்களை சிக்சர்கள் விளாசி குதூகலப்படுத்துவதில் ‘யுனிவர் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் இன்னும் ஜாம்பவானாக திகழ்கிறார். அவருக்கு ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் எந்த வகையில் சளைத்தவர் அல்ல.

    நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ஏபி டி வில்லியர்ஸ் 44 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 82 ரன்கள் குவித்து ஆட்மிழக்காமல் இருந்தார். கிறிஸ் கெய்ல் 10 பந்தில் 23 ரன்கள் அடித்தார்.



    82 ரன்கள் விளாசி ஆர்சிபி-யின் ஸ்கோர் 202 ரன்கள் உயர காரணமாக இருந்ததால் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இது ஏபி டி வில்லியர்ஸின் 20-வது ஆட்ட நாயகன் விருதாகும்.



    கிறிஸ் கெய்ல் 21 ஆட்ட நாயகன் விருதுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் சாதனையை சமன் செய்ய டி வில்லியர்ஸ்க்கு இன்னும் ஒரு விருதுதான் தேவை. ரோகித் சர்மா, எம்எஸ் டோனி, டேவிட் வார்னர், யூசுப் பதான் ஆகியோர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று 3-வது இடத்தில் உள்ளனர்.
    மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என ஆர்சிபி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரில் 8 மணிக்கு தொடர் நள்ளிரவில்தான் முடிவடைகிறது. போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால் அந்த அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த சீசனில் ரோகித் சர்மா, ரகானே, விராட் கோலி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அபராதத்திற்குப் பதிலாக இடைவேளையை 20 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைக்கலாம் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ஐபிஎல் விதிமுறைப்படி அணி தவறு செய்தால், அதற்கு கேப்டன் அபராதம் விதிக்க வேண்டிய நிலை உள்ளது. இது அவர்களை சற்று பாதிக்கிறது. இதனால் அபராதத்திற்குப் பதில் இன்னிங்ஸ் இடைவேளையை 20 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைக்கலாம்’’ என்றார்.
    இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை எந்த அணி வெல்லும் என்பதை கூறுவது கடினம் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பையை போட்டியை நடத்தும் இங்கிலாந்து கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும், ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சவால் விடும் வகையில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.

    இந்நிலையில் கோப்பையை வெல்லும் அணி எதுவாக இருக்கும் என்று கூறுவதாக கடினம் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20-யில் விளையாடி வரும் ஏபி டி வில்லியர்ஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘யார் வெற்றி பெறுவார் எனக் கூறுவது கடினமானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியதை பார்க்காமல் இருக்க முடியாது. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ளது.

    ஆஸ்திரேலியாவையும் நீங்கள் புறந்தள்ளிவிட முடியாது. தென்ஆப்பிரிக்கா அணியும் அவர்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புவார்கள். ஆகவே, இந்த ஐந்து அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் ஒன்று அல்லது இரண்டு அணிகளை குறிப்பிட்டு கூறுவது கடினமான விஷயம். கடந்த காலங்களில் உள்ள எனது அனுபவத்தை வைத்து பார்க்கும்போது, இந்தியா அல்லது பாகிஸ்தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்’’ என்றார்.
    உலகக்கோப்பை மட்டுமே என்னை ஒரு மனிதராகவும், கிரிக்கெட்டராகவும் வரையறுக்காது என்று ‘360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #ABDEVilliers
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். கடந்த ஆண்டு மே மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக்கோப்பை வரை விளையாடும்படி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்ட போதிலும், அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதனால் வங்காள தேசம் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதன்முறையாக விளையாடினார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    டி வில்லியர்ஸ் இல்லாமல் தென்ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்றது. இதற்கு தென்ஆப்பிரிக்காவின் தோல்வியே முக்கிய காரணம்.

    இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவீர்களா? உலகக்கோப்பை வரை விளையாடியிருக்கலாமே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி வில்லியர்ஸ் ‘‘உலகக்கோப்பை மட்டுமே என்னை கிரிக்கெட்டராக வரையறுக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவீர்களா? என்பது பதில் அளிப்பதற்கான கடினமான கேள்வி. மீண்டும் அணிக்கு திரும்பினால், நண்பர்களுடன் இணைந்து உயர்ந்த லெவல் கிரிக்கெட்டை நாட்டிற்காக விளையாடலாம். இதை தவற விடுவது சற்று கடினமாக இருக்கிறது.

    ஆனால், ஏராளமான விஷங்களை நான் மிஸ் செய்யவில்லை. 90 சதவிகிதம் விஷயங்களை நான் மிஸ் செய்யவில்லை. சர்வதேச போட்டியில் இருந்து நீண்ட தூரம் சென்று விட்டேன். உலகக்கோப்பை என்னை ஒரு கிரிக்கெட்டராகவும், மனிதராகவும் வரையறுக்க முடியாது’’ என்றார்.
    ‘360 டிகிரி’ என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் கவுன்ட்டி அணிக்காக விளையாடுகிறார். #T20Blast
    தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் முடிந்த உடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடினார். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் விளையாட மிடில்செக்ஸ் கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

    கடந்த சீசனில் மிடில்செக்ஸ் அணி 14 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    பீல்டிங்கில் ஜாம்பவானாக திகழ்ந்த ஜான்டி ரோட்ஸ், எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள் பெயரை தேர்வு செய்துள்ளார். #Cricket #JontyRhodes
    கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ். இவர் 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இன்சமாம்-உல்-ஹக்கை ரன்அவுட்டாக்கியதை யாரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.

    இவர் கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்களை தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னாவிற்கு இடம் கொடுத்துள்ளார்.



    ஐந்து பேர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா உடன் ஏபி டி வில்லியர்ஸ், கிப்ஸ், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சைமண்ட்ஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
    வங்காளதேச பிரிமீயர் லீக்கில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 50 பந்தில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார். #ABD #BPL
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது ஆட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் - ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. ரங்க்பூர் ரைடர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

    முதலில் பேட்டிங் செய்த டாக்கா டைனமைட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரோசவ் களம் இறங்கினார். இவர் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். இதனால் 5 ரன்னுக்குள் 2-வது விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் உடன் ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமாக விளையாடினார்கள்.



    ஏபி டி வில்லியர்ஸ் 50 பந்தில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் சரியாக 100 ரன்கள் குவித்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 53 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 85 ரன்கள் விளாச ரங்க்பூர் ரைடர்ஸ் 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க 189 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ‘360 டிகிரி’ என்ற அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் வங்காள தேச பிரீமியர் லீக்கில் விளையாடுகிறார். #ABDVilliers
    தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேவேளையில் டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று அறிவித்தார்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் லீக் போட்டிகளில் விளையாடும் வகையில் அவருக்கு நேரம் கிடைத்தது. இதனால் முதன்முறையாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.



    இந்நிலையில் வங்காள தேச பிரீமியர் லீக் தொடரிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரங்பூர் ரைடர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸ்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அணியில் ஏற்கனவே கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை விளாசும் திறமை படைத்தவர் என்பதால் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
    ×